Naalaayira dhivya prabantham
sung on in praise of the palli konda perumal of Thirumayam

(நாலாயிர திவ்ய ப்ரபந்தம்)
(திருமயம் பள்ளிகொண்ட பெருமாளின் மேல் பாடப்பெற்ற பாடல்கள்)

To read in Tamil, ensure that you have installed any Tamil Unicode Fonts. If you dont have any, you can download from http://barathee.beigetower.org
1095    
  பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானைப்

பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை

தண்ணார்ந்த வார்புனல் சூழ் மெய்ய மென்னும்

தடவரை மேல் கிடந்தானை, பணங்கள் மேவி

எண்ணானை எண்ணிறந்த புகழினானை

இலன்கொளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட

கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்

கடிபொழில் கடல்மல்லைத் தலசயனத்தே

peNNaaki innamutham vanjiththaanaip

piRai-yeyiRRan-Radalariyaayp perukinaanai

thaNNaarntha vaarpunal soozh meyya mennum

thadavarai mEl kidanthaanai, paNangal mEvi

ENNaanai ENNiRantha pugazhinaanai

ilankoLisEr aravindham pOnRu neeNda

kaNNaanai kaNNaarak kaNdu koNdEn

kadipozhil kadalmallaith thalasayanaththE.
 

 
மோகினி வடிவம் கொண்டு அமுதத்தை அசுரர்கள் உண்ணாதவாறு கெடுத்தவனும், இரணியனால் பிரகலாதன் துன்புற்றபோது நரசிங்கமாய் வளர்ந்தவனும், நீரால் சூழப்பட்ட திருமெய்யம் என்னும் மலைமேல் ஆதிசேடனின் படங்களின் கீழ் பள்ளி கொண்டிருப்பவனும், எல்லாராலும் எண்ணப்படுபவனும் அளவற்ற சிறப்புகளை உடையவனும், தாமரை இதழ்போல நீண்ட கண்களை உடையவனுமான பெருமானைச் சோலைகள் சூழ்ந்த கடல் மல்லையில் கண்டு கொண்டேன்.

திருமெய்யம் சத்யகிரிநாதன். மெய்யப்பன் கிழக்கே நின்ற திருக்கோலம். உய்ய வந்த நாச்சியார். இத்திருத்தலம் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
1206    
  நிலையாளா! நின்வணங்க வேண்டாயே யாகிலும் என்

முலையாள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே?

சிலையாளா! மரமெய்த திறலாளா! திருமெய்ய

மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே.

nilaiyaaLaa! ninvaNangka vENdaayE yaakilum en

mulaiyaaLa orunaaL un akalaththaal aaLaayE?

silaiyaaLaa! marameytha thiRalaaLaa! thirumeyya

malaiyaLaa! neeyaaLaa vaLaiyaaLaa maattOmE.

 
சார்ங்க வில்லை அடக்கி ஆள்பவனே! மரா மரங்களை வீழ்த்திய பெரிய வலிமை உடையவனே! திருமெய்யம் என்னும் திருப்பதியை ஆளுபவனே! நிலை பெற்ற அடிமையிலே இருந்து கொண்டு உன்னை நான் வணங்கும்படி அருள் செய்யாவிடினுமொரு நாளாகிலும் எனது கொங்கைகள் ஆட்செய்யும் படியாக உனது திருமார்பினால் அணைத்தருள வேண்டும். உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில் கையில் வளைதங்காமல் துன்ப்பபட வேண்டியதே அன்றோ எனக்குக் கதி?
2016    
  மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்

கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட

மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்

கையானை கைதொழாக் கையல்லகண்டாமே

maiyaar kadalum maNivaraiyum maa mugilum

koyyyaar kuvalaiyum kaayaavum ponRu iruNda

meyyaanai meyyamalaiyaanaic changkEththum

kaiyaanai kaithozhaak kaiyallakaNdaamE.

 
கடலையும் நீலமணிமயமான மலையையும் காளமேகத்தையும் பறிக்க வேணும் என்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் காயாம் பூவையும் போன்று கறுத்த திருமேனியை உடையவனும், திருமெய்ய மலையில் கோயில் கொண்டிருப்பவனும், சங்கேந்தும் திருக்கையை உடையனுமான பெருமானை வணங்காத கைகளானவை கைகளே அல்ல. இதனை நாம் நன்கறிவோம்.
2015    
  கூடாஇ இரணியனைக் கூருகிரால் மார்விடந்த

ஓடா அலரியை உம்பரார் கோமானை

தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்

பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல கேட்டாமே.

koodaai iraNiyanaik kurukiraal maarvidandha

Odaa alariyai umbaraar kOmaanai

thOdaar naRunthuzhaay maarvanai, aarvaththaal

paadaathaar paattu enRum padalla kEttaamE.

 
பகைவனான இரணியனுடைய மார்பைக் கூரிய நகங்களால் கீண்டருளிய பின்வாங்காத வீரம் பொருந்திய நரசிங்க மூர்த்தியானவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனும் மணமுள்ள துளசி மாலை அணிந்த திருமார்பை உடையவனுமான எம்பெருமானை அன்புடனே பாடாதவர்களின் பாட்டுகள் ஒரு நாளும் பாட்டுகள் ஆகமாட்டா என்று கேட்டிருக்கிறோம்.
 
1852    
  சுடலையில் சுடுநீறனமர்ந்து ஓர்

நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்

உடலையுள் புகுந்து உள்ள முருக்கியுண்

விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே.

sudalaiyil suduneeR-anamarndhu Or

nadalai theerthavanai naRaiyur kaNdu en

udalaiyuL pukunthu uLLa murukkiyuN

vidalaiyaic chenRu kaaNdum meyyaththuLLE.

 
சுடுகாட்டில் சுட்ட சாம்பலைப் பூசுபவனான சிவனுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி அருளினவனும், எனது உடலினுள்ள புகுந்த நெஞ்சை உருக்கி உண்கின்ற இளைஞனான சர்வேசுவரனை திருநறையூரிலே வணங்கி திருமெய்யத்திலே சென்று சேவிப்போம்.
1760    
  வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்யானமணாளர், இவ்வையமெல்லாம்

தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்களிருந்தவாறு

சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி

ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா!

vEyirunj chOlai vilankal coozhntha meyyaana-maNaLar, ivvaiyamellaam

thaayina nayakaraavar thozhee! thaamarai kaNkaLirunthavaaRu

chEyirung-kunRam thikazhntha thoppuc chevviyavaagi malarntha sOthi

aayiram thOLOdu ilanku pooNum achchO oruvar azhagiyavaa!

 
வாராய் தோழியே! மூங்கில்கள் நிறைந்துள்ள சோலைகளை உடைய குன்றுகளாலே சூழப்பட்ட திருமெய்ய மலையில் எழுந்தருளி இருக்கும் மணவாள பிள்ளையும், உலகை எல்லாம் தாவி அளந்தவருமான தலைவர் போலும் இவர்! தாமரை போன்ற திருக்கண்களின் அழகை என்ன சொல்வேன்? ஓங்கிய மலைகள் விளங்குவது போல அழகுடையவனவாய், ஒளியுடையவனவான ஆயிரம் திருத்தோள்களும் விளங்குகின்ற திருவாபரணமுமாய் அச்சோ ஒருவர் அழகை என்னவென்று சொல்வேன்.
1660    
  அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்றுவாய்

வெருவினாள் மெய்யம் வினவியிருக்கின்றாள்

பெருகு சீர்க் கண்ணபுரமென்று பேசினாள்

உருகினாள் உள்மெலிந்தாள் இது என் கொலோ?

aruvi sOr venkatam nIrmalai yenRuvaai

veruvinaaL meyyam vinaviyirukkinRaaL

perugu sIrk kaNNapuramenRu pEsinaaL

urukiNaaL uLmelinthaaL ithu en kolO?

 
இப்பரகால நாயகியானவள் அருவிகள் சொரிகின்ற திருமலை என்றும், திருநீர்மலை என்றும் சொல்லி வாய் பிதற்றினாள். திருமெய்யத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு (பதில் இல்லாததால்) வாளாயிருக்கிறாள். சிறப்புள்ள திருக்கண்ணபுரமென்று வாயால் சொன்ன அளவிலே நீர்ப் பண்டமானாள். நெஞ்சு சிதலமாகப் பெற்றாள். இப்படியுமொரு நிலைமை உண்டாவதோ?
1524    
  கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.

kattERu nIL chOlaik kaaNdavath-thaith thImootti

vittOnai meyyam amarntha perumaanai

mattERu karpagaththai maatharkkaai vaNthuvarai

nattaanai n-Adi n-aRaiyUril kaNdEnE.

 
காவல் மிக்கு இருப்பதும் நீண்ட சோலைகளை உடையதுமான காண்டவம் என்னும் வனத்தை நெருப்புக்கு இறையாக்கியவனும், திருமெய்யத்தில் என்றும் எழுந்தருளியுள்ள சுவாமியும் தேன் மிகுந்த கற்பக மரத்தைச் சத்தியபாமைப் பிராட்டிக்காகத் துவாரகையில் கொண்டுவந்து நட்டவனுமான பெருமானைத் தேடி நறையூரில் கண்டேன்.